| 
         
          | 3102. | விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே |   
          |  | எண்ணிலார் 
            முப்புரம் எரியுண நகைசெய்தார் கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம்
 அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.      7
 |  
             7. 
        பொ-ரை: சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத
 அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர்.
 நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை
 எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்
 அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
       கு-ரை: 
        விண் - தேவ உலகம். எண் இலார் - (வழிபட்டு உய்யும் ) எண்ணம் இல்லாதார்.
 |