3111. |
வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக் |
|
கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே. 5 |
5.
பொ-ரை: மலையில் செழித்த சந்தனமரங்களை
நீரோட்டத்தால் உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின்
மணல் சூழ்ந்த திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர்
அலைவீசும் கங்கையையும், சந்திரனையும் சடைமுடியிலே சூடி,
இடுக்கிலே கோவண ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர்.
கு-ரை:
வரை உலாம் - மலையிற் செழித்த. சத்து - சந்தன
மரங்கள். உலாம் - உலாவும்: இங்குச் செழித்த என்னும் பொருட்டு.
அரையின் கண் கோவணம் அசைக்கும் அடிகள் வேடங்கள் இருந்தவாறு.
|