| 
       
         
          | 3114. | சிலைதனால் முப்புரஞ் செற்றவன் சீரினார் |   
          |  | மலைதனால் 
            வல்லரக் கன்வலி வாட்டினான் கலைதனார் 
            புறவணி மல்குகாட் டுப்பள்ளி
 தலைதனால் வணங்கிடத் தவமது ஆகுமே.        8
 |        8. 
        பொ-ரை: சிவபெருமான் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை அழித்தவர். சிறப்புடைய கயிலை மலை
 யினால் இராவணனின் வலிமையை அடக்கியவர். மான்கள் உலவும்
 முல்லைநிலமான அழகு திகழும் திருக்காட்டுப்பள்ளி என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் பக்தியுடன்
 தலைதாழ்த்தி வணங்க நல்தவப்பேறு உண்டாகும்.
       கு-ரை: 
        இப்பாடலுள், தன் என்பன நான்கும் அசைகள், சீரின் ஆர்மலை, சிறப்பின் மிகுந்த மலை; கயிலை. உலகமெல்லாம்
 அழியும் ஒவ்வோர் பிரளயத்திலும் தான் அழியாமை மட்டுமன்றி
 வளரும் தன்மை உடையது. கலைதன் ஆர்புறவு-மானினத்தின்
 நிலமாகப் பொருந்திய முல்லை நிலம். அந்நிலக் கருப்பொருள்களில்
 ஒன்று மான்.
 |