| 
         
          | 3118. | பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி |   
          |  | மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
 பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     1
 |  
       
             1. 
        பொ-ரை: இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து,
 முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு
 அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது
 திருஅரதைப் பெரும்பாழியே ஆகும்.
      கு-ரை: 
        பைத்த - படத்தையுடைய, பாம்பு. பைத்த குறிப்புப் பெயரெச்சம். பாம்பு கோவணத்தோடு - என உருபு பிரித்துக்
 கூட்டுக. முழக்கம் முதுகாடு-முழக்கத்தையுடைய முதுகாடு. நடம்
 ஆடி வெண்ணீற்றை அணிந்த பித்தர் கோயில் என்க.
 |