3119. கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
  பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     2

     2. பொ-ரை: கயல்மீன் போன்றும், சேல் மீன் போன்றும்
அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை
நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும்
தன்மையுடையவர் சிவபெருமான். அவருடைய தன்மைகள்
வானவர்களும், அடியவர்களும் எண்ணுதற்கு அரிய. பல
திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில்
கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.

     கு-ரை: கயல் போன்ற கண்ணியரும், சேல் போன்ற
கண்ணியருமாகிய பல பெண்கள் (தாருகா வனத்து முனிபன்னியர்)
பயலை - பசலை. பான்மையார் - தன்மையுடையவர். இயலை - தம்
தன்மைகளை; நினைந்தோர்களுக்கு எண்ணுதற்கரிய பல
பெயரையுடையராயிருப்பார். அவர் எழுந்தருளியிருக்குங் கோயில்,
அரதைப் பெரும்பாழி.