| 
         
          | 3120. | கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் |   
          |  | மூடல்சா 
            லவ்வுடை யார்முளி கானிடை ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
 பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.        3
 |  
       
             3. 
        பொ-ரை: அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின்
 தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க
 சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய
 அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்
 பெரும்பாழியே.
       கு-ரை: 
        கோடல் - பிச்சை கொள்ளுதல். மூடல் - போர்வை; தொழிலாகுபெயர். முளிகான்-சுடுகாடு. பீடர்-பெருமையுடையவர்.
 |