| 
         
          | 3123. | புற்றர வம்புலித் தோலரைக் கோவணம் |   
          |  | தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
 பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     6
 |  
            6. 
        பொ-ரை: புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் இடையில் அணிந்து, இரவில் நடனமாடும்
 சிவபெருமான், பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக்
 கொடியுடையவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது
 திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        தற்று - இடையில்உடுத்து, "மடிதற்றுத்தான் முந்துறும்" என்பது திருக்குறள் 1023. இரவில் நடம் ஆடுவர். தாழ்தரு -
 வணங்குகின்ற. துற்று அமர்(வன) பாரிடம் - சுற்றியுள்ளவை
 பூதப்படை. அமர்; பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளுணர்த்
 திற்று. "பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்" என்ற திருக்குறளிற்
 (813) போல. கொடியின் மிசைப் பெற்றதை உடையவர். பெற்று -
 பெற்றம், விடை.
 |