| 
         
          | 3125. | சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை |   
          |  | நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல் அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
 பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.     8
 |  
       
       
	         8. 
        பொ-ரை: தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரியதோள்களும், தலைகளும்
 நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை
 வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு
 பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்
 தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        சரிவு இலா - தளர்தல் இல்லாத. தோடலை - தோள் + தலை. நெரிவில்லார் அடர்த்தார்-நெரித்தலால் முற்ற அடர்த்தவர்.
 நெறி குழலுக்குவரும் அடை. "வணர்வார் குழல்" எனவருவதும் அது.
 |