| 
       
         
          | 3127. | நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் |   
          |  | ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் சேணுலா 
            மும்மதில் தீயெழச் செற்றவர்
 பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.      10
 |  
	        10. 
        பொ-ரை: சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது
 அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து
 சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும்
 கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
       கு-ரை: 
        ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள். சேண்-ஆகாயம்.
 |