3130. |
கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை |
|
கண்டலுங்
கைதையுங் கமல்மார் வாவியும் வண்டுலாம்
பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே. 2
|
2.
பொ-ரை: மேகத்தைத் தொடும்படி உயர்ந்த
கோபுரங்களும், அழகிய மாளிகைகளும், நீர்முள்ளியும், தாழையும்,
தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும், வண்டுகள் உலவுகின்ற
சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக
நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின்,
உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை
வணங்குவீர்களாக.
கு-ரை:
கண்டல்-நீர்முள்ளி. உலாம்-உலாவும். செண்டு-
வட்டமாக நடை பயிலுதல்.
|