| 
         
          | 3135. | சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட |   
          |  | நடநவில் புரிவின னறவணி மலரொடு படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
 அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.    7
 |  
             7. 
        பொ-ரை: சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட, திருமயேந்திரப்பள்ளியுள்
 வீற்றிருந்தருளுபவனும், திருநடனம் செய்பவனும், தேன் துளிக்கும்
 வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில்
 சந்திரனைச் சூடியவனும், வலிமையுடைய எருதினை வாகனமாக
 உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை
 அடைவீர்களாக!
       கு-ரை: 
        சமைவு ஓடும் - சேகரித்த பூசைத்திரவியங்களோடும்(வழிபட). சமைவு - சேகரித்தல்,
 அமைத்தல். இங்கு ஆகுபெயர்.
 |