3140. |
வன்னியு மத்தமு மதிபொதி சடையினன் |
|
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே. 1 |
1.
பொ-ரை: வன்னியும், ஊமத்த மலரும், சந்திரனும்
தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானின் பொன்போன்ற
திருவடிகளைப் புதுமலர்களைக் கொண்டு பெருமையுடைய
அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இன்னிசையுடன்
பாடிப் போற்றவும் ஒப்பற்ற இறைவனான சிவபெருமான்
திருவேடகத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
மத்தம் - பொன்னூமத்தை, மதிபொடி - மதியை
மறைக்கும். பொன் இயல் - பொன்போன்ற. திருவடி - (பொன்னார்)
திருவடி.
அடியவர்
இன் இசைப்பாடல் அர் - அடியவர்களின் இனிய
இசைப்பாடல்களையுடைய (ஏடகத்து ஒருவன்)
|