3144. |
வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக் |
|
கரியினை
யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 5 |
5.
பொ-ரை: செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல
மலை மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த,
விடம் அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான்,
பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி
உருவினார். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக்
கோயிலாகும்.
கு-ரை:
செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை
மகள் கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது
முதலிரண்டடியின் பொருள். கறை - விடக்கறை. எரியவன்
- நெருப்பு உருவினன்.
|