| 3151.  | 
          கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் | 
         
         
          |   | 
          பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லையார் 
            புறவணி முதுபதி நறைகமழ்  
            தில்லையா னுறைவிடந் திருவுசாத் தானமே.     2 | 
         
       
           2. 
        பொ-ரை: முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை)  
        இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன்.  
        குறிதரு கோலநற் குணத்தினா ரடிதொழ முன்பல்லிருந்த உலர்ந்த  
        பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன்.  
        முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும்  
        சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில்  
        விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம்  
        திருவுசாத்தானம் ஆகும். 
            கு-ரை: 
        கொல்லை - முல்லைநிலம். பல்லை ஆர்தலை -  
        பல்லை முன் உடையதாயிருந்த தலை. படுதலை - உலர்ந்த  
        மண்டையோடு. பல்லில் வெள்ளைத் தலையன்' (தி.7.ப.81.பா.10.)  
        என வருதலால் இங்ஙனம் பொருள் கூறப்பட்டது. முல்லை  
        ஆர்புறவு - முல்லைக் கொடிகளை உடைய முல்லை நிலம். 
       |