3152. |
தாமலார் போலவே தக்கனார் வேள்வியை |
|
ஊமனார்
தங்கனா வாக்கினா னொருநொடிக்
காமனா ருடல்கெடக் காய்ந்தவெங் கண்ணுதல்
சேமமா வுறைவிடந் திருவுசாத் தானமே. 3 |
3.
பொ-ரை: தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன்
செய்த வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்ற
தாக்கினான். ஒரு நொடியில் மன்மதனின் உடல் எரிந்து
சாம்பலாகுமாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுளாவான்.
அப்பெருமான் அடியவர்கட்கு நன்மை தரும் பொருட்டு
வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
பகையும் நட்புமில்லாத பரஞ்சுடர். பகைவன்
போலாகித் தக்கனார் வேள்வியை ஊமன் கனவுபோல
ஒன்றுமில்லாமற் செய்தவன். ஊமனார் இகழ்ச்சிக்குறிப்பு; தாம்
ஆக்கினான். ஒருமை பன்மை மயக்கம். சேமம் ஆ(க) -
உலகினருக்கு நன்மை உண்டாதற் பொருட்டு.
|