3153.
|
மறிதரு
கரத்தினான் மால்விடை யேறியான் |
|
குறிதரு
கோலநற் குணத்தினா ரடிதொழ
நெறிதரு வேதியர் நித்தலு நியமஞ்செய்
செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே. 4 |
4
பொ-ரை: இள மான்கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி,
பெருமையுடைய இடப வாகனத்திலேறி, சிவவேடப் பொலிவுடைய
நற்பண்புடைய அடியவர்கள் தன் திருவடியைத் தொழுது
போற்றவும், சிவாகமநெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும்
நியமத்துடன் பூசை செய்யவும் விளங்கும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த அழகிய
திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
மறி - மான் கன்று. சிவனடியாரெனக் குறிக்கும்
கோலமும் சீலமும் உடைய அடியார் தொழ என்பது இரண்டாம்
அடியின் பொருள். நெறிதரு - நெறியில் ஒழுகுகின்ற. நித்தம் -
நித்தல் என்றாயது கடைப்போலி. செறிதரு - அடர்த்தியான
பொழில்.
|