3157. |
கானமார் வாழ்க்கையான் காரமண் டேரர்சொல் |
|
ஊனமாக் கொண்டுநீ ருரைமினுய் யவெனில்
வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே. 10 |
10.
பொ-ரை: சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை
உணராது கூறும் சொற்கள் பயனற்றவை. நீங்கள் உய்ய வேண்டும்
என்றால் சுடுகாட்டில் திருநடனம் செய்யும் இறைவன்
வீற்றிருந்தருளுகின்ற, வானளாவிய உயர்ந்த மதில்களும்,
மாளிகைகளும், செழித்த சோலைகளும் சூழ்ந்த இனிய நிலவு
தோயும் திருவுசாத்தானம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
வழிபடுங்கள்.
கு-ரை:
கானம் - சுடுகாடு. ஊனம் - தீங்கு விளைவிப்பது.
தேன்: அமிர்த கிரணத்தை உடையன மாமதி.
|