3160. |
வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு |
|
பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங்
கையினான் மங்கையோ டமர்விடம் செறியுளார் புறவணி திருமுது குன்றமே. 2 |
2.
பொ-ரை: வாசனை பொருந்திய கொன்றை மாலையை
அணிந்து, படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில்
கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான், இளமான்
கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய், உமாதேவியோடு
வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய
திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
பொறி உலாம் மா - புள்ளியுடை மான்தோலை.
அசைத்து - உடைத்து. செறியுள் (வளம்) செறிதல். செய்யுள்,
விக்குள் என்புழிப்போல, செறியுள் - என்பதிலும் உள்
தொழிற்பெயர் விகுதி. செறியுள் - மண்டிணிந்த வன்னிலம்.
ஆர் - பொருந்திய புறவு.
|