| 
       
         
          | 3162. | உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும் |   
          |  | விரையினார் 
            கொன்றைசேர் சடையினார் மேவிடம் உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த்
 திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே.        4
 |  
            4. 
        பொ-ரை: இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம்
 கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன்.
 அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும்
 அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற
 மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும்.
       கு-ரை: 
        (சொல் வடிவாயிருப்பதோடு) சொல்லிற் பொருந்திய பொருளும் ஆயினவன் சொல்லானைச் சொல்லார்ந்த
 பொருளானை (அப்பர் பெருமான்) என்பதும் காண்க. சொல் வடிவு
 அம்பிகை, பொருள் வடிவு இறைவன் என்ற
 திருவிளையாடற்புராணத்தோடு மாறுபாடின்மை சிவம் சத்தி
 அபேதத்தாற் கொள்க. விரை - வாசனை.
 |