3163. |
கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர் |
|
இடியவெங்
குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி திருமுது குன்றமே. 5 |
5.
பொ-ரை: கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற,
இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில், கூரிய
முனையுடைய மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப்
புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
பிளிற - (யானை) முழங்க, கடிய ஆயின குரல்
களிற்றினை - கடுமை உடையன ஆன குரலையுடைய அவ்
யானையை. ஓர் - ஒரு. ஆளி - சிங்கம். இடிய - இடிபோன்ற.
வெங் குரலினோடு - கொடிய குரலோசையோடு. சென்றிடும் -
செல்லும். நெறி - வழிகளையுடைய - (திருமுதுகுன்றம்) புறவணி
முதுகுன்றம் என்க. வடிய - கூரிய.
|