3166. |
காரினா
ரமர்தருங் கயிலைநன் மலையினை |
|
ஏரினார்
முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
8 |
8.
பொ-ரை: மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்
கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும்
கயிலை மலையினை, அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது,
அவனை நலியச் செய்த இறைவன், கச்சணிந்த முலையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க
திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
கார் மேகம் - பருவம் அறிந்து பெய்யும் மேகம்
போல. பக்குவ நோக்கி ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வரலால்.
காரினார் - மேகம் போன்றவர். இராவணன் இறச் செய்து - என
ஒரு சொல் வருவிக்க, சொல்லெச்சம். சீரினார் - மேலோர்கள்.
திகழ்தரு - விளங்கி வாழ்கின்ற. (திருமுதுகுன்றம்).
|