3168. |
மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர் |
|
பேசுமெய்
யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே. 10 |
10.
பொ-ரை: அழுக்கு உடம்பையும், அழுக்கு
உடையையுமுடைய சமணர்களும், புத்தர்களும் கூறும் மொழிகள்
மெய்ம்மையானவை அல்ல. வாசனை பொருந்திய சோலைகளில்
வண்டினங்கள் இசைக்க, அழகும், புகழும் மிகுந்த திருமுதுகுன்றம்
என்னும் திருத்தலத்தைத் தரிசித்து, அங்குள்ள இறைவனைப்
போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
மாசு - அழுக்கு. அச்சொல்லைத் தூசு என்ற
சொல்லினும் கூட்டி அழுக்கு உடம்பையும் அழுக்கு உடையையும்
உடைய என உரைக்க.
|