3169. |
திண்ணினார் புறவணி திருமுது குன்றரை |
|
நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினா
னீரைந்து மாலையு மியலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 11 |
11.
பொ-ரை: செழுமையான சோலைகளையுடைய
திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றுபட
வழிபட்டு, சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு
பாடவல்லவர்களின் பாவம் நீங்கும்.
கு-ரை:
இயலுமாப் பண்ணினால் பாடுவார் கோழைமிடறாகக்
கவி கோளுமில வாக இசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள்
யாவைசொன சொல் மகிழும் ஈசன் (தி.3 ப.71.பா.1.) ஒப்பிடுக.
பதிகக் குறிப்பு முதுகுன்றம் என்பதற்கேற்ப 1,5,7 இப்பாடல்களிற்
குறிஞ்சி நில வருணனை கூறப்படுகிறது.
|