3170. முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
  தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.     1

     1. பொ-ரை: நான்கு மறைகளும் நூல்களில் விதித்த
முறையில் தொழுது போற்ற, உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை
முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து
செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய
தென்குடித்திட்டை ஆகும்.

     கு-ரை: தன்னதாள் - தன்னுடைய திருவடிகள். அகரம் -
ஆறன் உருபு “மன்னுமா காவிரி,”