3173. |
உண்ணிலா
வாவியா யோங்குதன் றன்மையை |
|
விண்ணிலா
ரறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே. 4 |
4.
பொ-ரை: இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும்
தன்மையைத் தேவர்களும் அறிகிலர். அவன் வேத உபநிடத
உட்பொருளாக விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல்,
தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
கு-ரை:
உள் - உயிருக்குள். நிலாவு - விளங்கும். ஆவியாய்
- உயிராய். ஓங்கும் தம் தன்மை. உயிர்க்குயிராம் ஒருவனையும்
என வருதல் காண்க. (சிவஞானசித்தியார். சூ. 9. பா. 5) ஆர் -
நிறைந்த. எண்ணில் - அளவற்ற. அழகையுடைய மணிகள்
அழுத்திய பொன் மாளிகையின்மேல் தெளிவான நிலாவிரித்துப்
பரவும் தென்குடித்திட்டை.
|