3176. |
கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள் |
|
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே. 7 |
7.
பொ-ரை: காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர்
குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது,
தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி, தவத்தையுடைய
கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான். அப்
பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில்
மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும்
வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும்.
கு-ரை:
கான் அலைக்கும் அவன் - காட்டிலுள்ள
உயிர்வருக்கங்களை வருத்துகின்ற அவ்வேடர் குலத்தினராகிய
கண்ணப்ப நாயனார். வான் - தேவர்களையும். அலைக்கும் -
(பொறாமையினால்) வருந்தச் செய்வதாகிய. தவம் - தவத்தையுடைய.
தேவு செய்தான் - தெய்வமாகச் செய்தவன். குவபெருந்தடக்கை
வேடன் ... ... தவப் பெருந்தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே
என்பதும் நரகரைத் தேவு செய்வானும் என்பதும் அப்பர்
திருவாக்கு.
தெள்ளம்
ஊர் ... தென்குடித்திட்டை - தாமரைகளையுடைய
தண்ணிய துறையிலிருந்து தேன் அலை வீசிப்பாயும் வயல்
வளத்தையுடைய தென்குடித்திட்டை.
|