| 
         
          | 3183. | கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி |   
          |  | மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில் ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
 வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே.     3
 |        3. 
        பொ-ரை: கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின்
 கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது
 போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு
 எளிதாகக் கைகூடும்.
       கு-ரை: 
        வீங்கு - வளர்ந்து வருகிற. வெந்துயர் - கொடிய துயர். கன்மங்கள்; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்.
 |