3185. |
வரைதரு மகிலொடு மாமுத்த முந்திய |
|
திரைதரு முகலியின் கரையினிற் றேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே. 5 |
5.
பொ-ரை: மலையில் வளரும் அகிலும் முத்துக்களும்
அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில்,
தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து
விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின்
ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும்
நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.
கு-ரை:
வரை - மலை. அகில் - மரம். திரைதரு -
அலைகளால் தருகின்ற.
முகலி - பொன்
முகலியாறு. விரை - மணம். விண்ணவன் -
தேவாதி தேவனாகிய சிவபிரான். நித்தல் - நாள்தோறும்.
|