3186. முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும்
  எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக்
கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.     8

     8. பொ-ரை: இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி
தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும்,
மணிகளும், மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும்
பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய
திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.
அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம்
கடமையாகும்.

     கு-ரை: இராவணன் என்ற பெயர்க்காரணம் புலப்பட, கத்திட
என்றார்.