| 3187.  | 
          மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி | 
         
         
          |   | 
          நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர் 
	வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா 
            அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே.  9 | 
         
       
	  
             9. 
        பொ-ரை: வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன்  
        வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும்  
        பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில்  
        வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும்,  
        எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான்  
        வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப்  
        போற்றி உய்தி பெறுங்கள். 
            கு-ரை: 
        மண்ணும் - நிலத்தையும், (மா) வேங்கை  
        மரங்களையும். மருதுகள் - மருதமரம் முதலியவற்றையும். பீழ்ந்து -  
        பிளந்து. உந்தி - அடித்துக்கொண்டு. 
     
	 |