3200. |
வினவினேனறி யாமையில்லுரை |
|
செய்ம்மினீரருள்
வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை
மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம
ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்
வையமாப்பலி தேர்ந்ததே. 1 |
1.
பொ-ரை: இறையருளை வேண்டிய பணிசெய்யும்
அன்பர்காள்! அறியாமை காரணமாக வினவுகின்றேன்.
உரைசெய்வீர்களாக! ஆரவாரத்தோடு மிகுந்தநீர் செல்லும்
காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்ட
நாதன், தனக்கு நெருக்கமான திருமாலும், பிரமனும் அண்டங்களை
ஆளத் தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும், பாடியும்
பிச்சையேற்றுத் திரிவது ஏன்? தனக்கு முன்னோர் தேடிவைத்த
பொருள் இல்லாத காரணத்தினாலா?
கு-ரை:
கனைவு - வேகம். கண்டியூர் வீரட்டன். தமர்
ஆயினார் - தம்தம் இனத்தவரான பிரம விட்டுணுக்கள். அண்டம்
ஆளத்தான் வனத்தில் குடியிருந்து இவ்வுலகில் பெரிய பிச்சை
எடுப்பது. முன்னே தனம் - முன்னோர் தேடிவைத்த பொருள்,
தனக்கு இல்லாமையாலோ? அவன் அருளை வேண்டிப்
பணிசெய்யும் அடிகளீர், நீர் முற்றிலும் உணரும்படி விடை
சொல்வீர்களாக என்பது இதன் பொழிப்பு. அறியாமை இல் உரை
செய்தல் - கேட்போர் ஐயந்திரிபு இல்லையாக அங்கை நெல்லியென
உணருமாறு உரைத்தல் வினவினேன், அருள வேண்டுவீராகிய நீவிர்
அறியாமை இல்லாத விடையாக உரை செய்யுமின் என்றார்
கேட்டோர். அறியாமை என்பதற்கு வேறு பொருள் கூறுதல்
பிழையாகும். தமர் ஆயினார் என்றது அரசினையும்,
தண்டலையாளரையும். குடியரசுகள் அரசியலார் என்பது போன்று,
தமர் அண்டம் ஆளத் தான் பிச்சை எடுப்பது ஏன்?
|