3201. |
உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர் |
|
வாயமாதவம்
பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழங்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை
வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு
மங்கையா ளுடனாகவே. 2 |
2.
பொ-ரை: உயர்ந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே!
எனக்கு உள்ளவாறு உரைசெய்வீர்களாக! தேன்கமழும் சோலைகள்
சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும், மிக்காருமில்லாத,
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமான் இளம்பிறைச்
சந்திரனைச் சிவந்த சடையின் மீது வைத்ததும், பெருநீர்ப்
பெருக்காகிய கங்கையைச் சடையில் தாங்கியதும் என் கொல்?.
கு-ரை:
உறைகாதலான் - வாழ்வதில் காதலுடையவன்.
பிள்ளைப்பிறை - இளம்பிறை. மிகும் மங்கையாள் - ஒப்பாரும்
மிக்காரும் இல்லாது மேன்மையுற்ற மங்கை, அம்பிகை. கடவுளாயின்
மங்கை உடனாகத் தலையிற் பிறையும் நீர்ப்பெருக்கையும் தாங்கியது
என்கொல்?.
|