3202. |
அடியராயினீர் சொல்லுமின்அறி |
|
கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர்
வீரட்டத்துறை பான்மையான் முடிவுமாய்முத
லாய்இவ்வைய
முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி
நூலும்பூண்டெழு பொற்பதே. 3 |
3.
பொ-ரை: என் சிற்றறிவினால் சிவபெருமானின்
செய்கையை அறிய இயலவில்லை. எப்பொழுதும் சிவபெருமானின்
திருவடிகளை இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும்
அடியவர்களே! நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக! உலகமெல்லாம்
தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில்
வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும்,
ஆதியாயும் இருப்பவன். இவ்வுலகம் முழுவதும் நிறைந்து
விளங்குபவன். அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப்
பூச்சும், முப்புரிநூலும் பூண்டு தோன்றுவது ஏன்?
கு-ரை:
அறிகின்றிலேன் என்றது - முற்பிறப்பிற் செய்த சிவ
புண்ணிய மேலீட்டினால் சைவநெறி தலைப்பட்ட ஒருவர் கூறுவதாக
வந்தது. கழை - மூங்கில். முடிவும் முதலும் ஆய் - எல்லா இடமும்,
எல்லாக் காலமுமாகிய ஒரு பொருளுக்கு இவ்வையகம் முழுதும் ஒரு
உடம்பு. அதில் மார்பும் அழகிய திருநீற்றுப் பூச்சும், முப்புரிநூலும்
பூண்டு தோன்றும் தோற்றம் ஏன்? பொற்பு என்றது இங்குத் தன்மை
என்னும் பொருளில் வந்தது.
|