3203. |
பழையதொண்டர்கள் பகருமின்பல |
|
வாயவேதியன்
பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி
மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு
குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்துகந்த பொலிவதே. 4 |
4.
பொ-ரை: சிவனடியார் திருக்கூட்டமரபில் வழிவழியாய்
வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய
தன்மைகளையுடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள்.
மலையிலிருந்து பெருகும் காவிரியால் வளம்மிகுந்த திருக்கண்டியூரில்
வீற்றிருந்தருளும் வீரட்டநாதன், தன் காதில் ஒரு குழையணிந்து
மகிழ்ந்து, மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய நீண்ட
தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தது
ஏன்?
கு-ரை:
ஈசனது பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குத்
தெளியப் பகருமின். கடவுள் - எனின் அவன் காதில் குழை
ணிந்ததும் யானையை உரித்து அதைப் போர்த்ததும் ஏன்?
|