3216. |
கனகநந்தியும் புட்பநந்தியும் |
|
பவணநந்தியுங்
குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியு மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனும்
சினகருக்கெளி யேனலேன்றிரு
வாலவாயர னிற்கவே. 6 |
6.
பொ-ரை: கனகநந்தி, புட்நந்தி, பவணநந்தி, குமண
மாசுனகநந்தி, குனகநந்தி, திவணநந்தி என எண்ணற்ற பலவகை
நந்திகள் என்னும் பெயர் கொண்டவர்களாய் மது உண்பதை
ஒழித்து, அவமாகிய நிலையைத் தவமெனக் கொள்ளும் சமணர்கட்கு
யான் எளியேனல்லேன், திருவாலவாயரன் என்னுள் நிற்பதால்.
கு-ரை:
மொழி - நமது உபதேச மொழிகளைக் கொள்ளாத.
சினகர்- ஜினனே கடவுளென்னும் கொள்கையுடைய.
|