| 
         
          | 3220. | தங்களுக்குமச் சாக்கியர்க்குந் |   
          |  | தரிப்பொணாதநற் 
            சேவடி எங்கணாயக னேத்தொழிந்திடுக்
 கேமடுத்தொரு பொய்த்தவம்
 பொங்குநூல்வழி யன்றியேபுல
 வோர்களைப்பழிக் கும்பொலா
 அங்கதர்க்கெளி யேனலேன்றிரு
 வாலவாயர னிற்கவே.              
             10
 |  
     
            10. 
        பொ-ரை: சமணர்கட்கும், புத்தர்கட்கும் அரியவராகிய, நல்ல சிவந்த திருவடிகளையுடைய எங்கள் தலைவராகிய
 சிவபெருமானை வழிபடுதலைவிட்டு, பொய்த்தவம் பூண்டு, நல்ல
 நூல்கள் கூறும் வழியும் நில்லாது அறிஞர்களைப் பொல்லாப்
 பழிச்சொல் பேசுபவர்கட்கு, யான் திருவாலவாயரன் என்னுள்
 நிற்பதால் எளியேன் அல்லேன்.
      கு-ரை:ஏத்து 
        ஒழிந்து - ஏத்துலை நீங்கி, ஏத்தாமல், இடுக்கு மடுத்துத் துன்புறுத்தலையே பொருந்தி. வாய்த்தவம்.....
 பழிக்கும் - நூல் வழியில்லாமலே ஒரு பொய்த்தவம் நாட்டி
 அறிஞரைப் பழிக்கின்ற. புலம் - அறிவு. புலவோர் - அறிஞர்,
 அங்கதர்.
 |