3224. கல்லாநெஞ்சின், நில்லானீசன்
  சொல்லாதாரோ, டல்லோநாமே.     3

     3. பொ-ரை: இறைவனை இடைவிடாது தியானிக்காதவர்
உள்ளத்தில் அவன் நில்லான். ஆதலால் அப்பெருமானின்
பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம்.

     கு-ரை: கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத
உள்ளத்தில். நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும்
செப்புதல், அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும்
சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து.
'இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப' என்ற சிந்தாமணியின்
உரையால் இப்பொருள் கொள்க.