3225. |
கூற்றுதைத்த, நீற்றினானைப் |
|
போற்றுவார்கள், தோற்றினாரே. 4 |
4.
பொ-ரை: மார்க்கண்டடேயரின் உயிரைக் கவரவந்த
கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த, தன் திருமேனியில்
திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே
பிறந்ததன் பயனை அடைவர்.
கு-ரை:
தோற்றினார் - பிறந்த பயன் எய்துவர். "தோன்றிற்
புகழொடு தோன்றுக" - (திருக்குறள்) என்பதனோடு ஒப்பிடுக.
|