3229. |
தூர்த்தன்வீரம், தீர்த்தகோவை |
|
ஆத்தமாக,
ஏத்தினோமே. 8 |
8.
பொ-ரை: துன்மதியால் கயிலையைப் பெயர்த்த
இராவணனது வலிமையை அழித்து, பின் அவன் தன் தவறுணர்ந்து
சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும்,
நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி
வணங்கினோம்.
கு-ரை:
தூர்த்தன்-இராவணன். ஆத்தம் - நண்பன். பண்பாகு
பெயர். "ஆத்தமென்றெனை ஆளவல்லானை" - ஆளுடைய நம்பிகள்
வாக்கு.
|