3230. பூவினானும், தாவினானும்
  நாவினாலும், நோவினாரே.            9

     9. பொ-ரை: தாமரைப் பூவின்மேல் வீற்றிருந்தருளும்
பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும், இறைவனின்
திருமுடியையும், திருவடியையும் உடல்வருந்தித் தேடியும்
காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி
உருகிநின்றனர்.

     கு-ரை: தாவினான் - உலகம் அளந்தவன்.- 'திருமால்
அடியளந்தான் தாஅயதெல்லாம்' என்ற திருக்குறளில் இப்பொருள்
காண்க.