3232. |
அந்தண்காழிப், பந்தன்சொல்லைச் |
|
சிந்தைசெய்வோர்,
உய்த்துளோரே. 11 |
11.
பொ-ரை: அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை
செய்து பாடுபடுவர்கள் உய்தி பெற்றவர்களாவர்.
கு-ரை:
அந்தண்காழி - அழகிய குளிர்ந்த காழி. பந்தன் -
ஞானசம்பந்தன் ஒருபுடைப்பெயர் கொளல் எனும்
வடமொழியிலக்கணம் பற்றி.
|