3234. |
மதியார்கச்சி, நதியேகம்பம் |
|
விதியாலேத்தப்,
பதியாவாரே. 2 |
2.
பொ-ரை: மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில்
கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம
விதிப்படி அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத்
தலைமையாய் விளங்குவார்கள்.
கு-ரை:
மதி ஆர்கச்சி - மதி தவழும் மாடங்களையுடைய
கச்சி.
|