3236. வரமார்கச்சிப், புரமேகம்பம்
  பரவாவேத்த, விரவாவினையே.         4

     4. பொ-ரை: தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய
வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும்.
இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற
வினை தொடராது நீங்கும்

.      கு-ரை: பரவா - பரவி, துதித்து, உடன்பாட்டு வினையெச்சம்.
கச்சிப்புரம் - காஞ்சிபுரம்.