3239. |
கரியின்னுரியன், திருவேகம்பன் |
|
பெரியபுரமூன்,
றெரிசெய்தானே. 7 |
7.
பொ-ரை: யானையின் தோலை உரித்துப் போர்த்துக்
கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான், தேவர்களைத்
துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும்
எரியுண்ணும்படி செய்தார்.
கு-ரை:
பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம்.
|