3240. இலங்கையரசைத், துலங்கவூன்றும்
  நலங்கொள்கம்பன், இலங்குசரணே.     8

     8. பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனைக்
கயிலைமலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி, அவன்
நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே
ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும்.

     கு-ரை: துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும்
விளங்க. கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர்.