3242. பறியாத்தேரர், நெறியில்கச்சிச்
  செறிகொள்கம்பம், குறுகுவோமே.      10

    10 பொ-ரை: தலைமயிர் பறியாத புத்தர்களும், அது
பறிக்கப்பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது, கச்சியில்
ஞானம்
 பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து
வழிபடுவோமாக.

     கு-ரை: பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர்;
என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம்.
நெறியில் - அவர்கள் வழியிற் சேர்தலில்லாத. கம்பம் - கோயில்.