3243. |
கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம் |
|
மெச்சுஞ்சொல்லை,
நச்சும்புகழே. 11 |
11 பொ-ரை: கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப்
போற்றிப்பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன்
விளங்குவார்கள்.
கு-ரை:
கொச்சை - கொச்சைவயம், சீகாழி. மெச்சும் சொல்லை
- வியந்து பாடிய இப்பதிகத்தை. நச்சும் புகழ் - புகழ் விரும்பும்;
என்றது இப்பதிகத்தைப் பாடவல்லார்க்குப் புகழ் முதலிய
மேன்மைகள் தாமாகவே விரும்பி வந்தடையும் என்பதாம். புகழ் -
உபலட்சணம்.
|