| 
         
          | 3246. | நெடுவெண்டிங்கள் வாண்முக |   
          |  | மாதர்பாட 
            நீள்சடைக் கொடுவெண்டிங்கள் சூடியோ
 ராடன்மேய கொள்கையான்
 படுவண்டியாழ்செய் பைம்பொழிற்
 பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
 கடுவெங்கூற்றைக் காலினாற்
 காய்ந்தகடவு ளல்லனே.             3
 |  
            3. 
        பொ-ரை: வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட,
 நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம்
 செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப்
 பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில்
 வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால்
 உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?
       கு-ரை: 
        தன் நிலவை உலகெலாம் விரித்தலால் நெடியதாகிய வெண்திங்கள். கொடு - வளைந்த. கடுவெம் கூற்று - மிகக் கொடிய
 கூற்றுவன். கடு என்பது - மிகுதியைக் குறிக்கும் கடியென்ற உரிச்
 சொல்லின் திரிபு. சிவனடியார்மேற் சென்றமை கருதிக் கடுவெங்
 கூற்று எனப்பட்டான்.
 |