3248. |
வானார்திங்கள் வாண்முக |
|
மாதர்பாட
வார்சடைக்
கூனார்திங்கள் சூடிய
ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந்
திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும்
மகிழ்ந்தமைந்த னல்லனே. 5 |
5.
பொ-ரை: வானில் விளங்கும் சந்திரனைப் போன்று
ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட,
நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம்
செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு
இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும்
இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய
உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான்
அல்லரோ?
கு-ரை:
கூன் ஆர் திங்கள் - கூன்பொருந்திய திங்கள்.
திருஆரும் - சிறப்புப் பொருந்திய, சிற்றேமம். அந்த ஆடலுக்கு
அம்பிகாஜத்ய நடனம் என்றும் பெயர். மான்போன்ற விழியை
யுடைய அகிலாண்டேசுவரியென்னும் அம்மையோடும்
பொன்வைத்தநாகனெனப் பெயர் பூண்டு இங்குத்
திருச்சிற்றேமத்திலெழுந்தருளிய இறைவன் முன்பு சிவகாமசுந்திரியார்
பாட நடனமாடிய கொள்கையன் அல்லனோ? என இப்பாடலுக்குப்
பொருள் கூறுக.
|