| 
         
          | 3249. | பனிவெண்டிங்கள் வாண்முக |   
          |  | மாதர்பாடப் பல்சடைக் குனிவெண்டிங்கள் சூடியோ
 ராடன்மேய கொள்கையான்
 தனிவெள்விடையன் 
            புள்ளினத்
 தாமம்சூழ்சிற் றேமத்தான்
 முனிவு மூப்புநீக்கிய
 முக்கண்மூர்த்தி யல்லனே.     6
 |  
            6. 
        பொ-ரை: குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட,
 சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர்
 இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு,
 பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும்
 திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு
 அற்றவ ராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண்
 மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?
       கு-ரை: 
        மேய - மேவிய. தனி - ஒப்பற்ற. புள்ளினத்தாமம் - மாலைபோற் பறக்கும் பறவைக்கூட்டம். முனிவும் மூப்பும் நீக்கிய
 முக்கண் மூர்த்தி.
       முனிவு - வெறுப்பு 
        (விருப்பும், நீங்கிய "ஆசை முனிவு இகந்துயர்ந்த அற்புதமூர்த்தி" என்றார் பிறரும்) மூப்பும்,
 உபலக்கணத்தால், நரை, திரை சாக்காடும் கொள்க.
 |